தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வியாபாரம் மற்றும் பால்பண்ணை தொழிலை பாதித்துள்ள தோல் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையிலும் தொற்று தொடர்ந்து நீடிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், கால்நடைகளுக்கு கைகால்வாய் நோயிற்கான (Foot and Mouth Disease- FMD) தடுப்பூசிகளை வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 3,84,871 கால்நடைகளுக்கு 100% தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, கால்நடைத்துறை சார்பில் சுமார் 3,46,000 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. FMD தடுப்பூசி இயக்கத்தை விவசாயிகள் வரவேற்கும் அதே வேளையில், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் அம்மை நோயினை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெ.பிரதாபன் தெரிவிக்கையில், “தர்மபுரியில் மாட்டு வியாபாரம் முக்கியத் தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக, கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் அம்மை நோய், விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
எங்களது கோரிக்கையை ஏற்று பல சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இன்னும் பல கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படாத சூழ்நிலையில் தோல் அம்மை நோய் இன்னும் பரவி வருகிறது. எனவே, FMD முகாமுடன், தோல் அம்மை நோய்க்கான தடுப்பூசிகளையும் கால்நடை துறை வழங்க வேண்டும்'' என்றார்.
மற்றொரு விவசாயி, பாலக்கோடு கே.கணேசன் கூறுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில், FMD, ஆந்த்ராக்ஸ், சமீபகாலமாக தோல் அம்மை நோய் போன்ற பல தொற்று நோய்கள் உள்ளன. நோய்களினால் இறப்பு குறைவாக இருந்தாலும், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலினால் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடை மருத்துவர்களால் தடுப்பூசிகளை திறம்பட பயன்படுத்த முடியவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வினை தீவிரப்படுத்தவும், சிறப்பு தடுப்பூசி இயக்கத்தை வழி நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு குறித்து பதில் தெரிவிக்கையில், “கால்நடை துறையானது மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட முகாம்களை வைரஸுக்காக நடத்தி உள்ளது. மேலும் நோய் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது வரை 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியுள்ளோம். எங்களிடம் போதுமான அளவிலான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. தோல் அம்மை நோய் தடுப்பூசியானது மாவட்டத்திற்கு புதியது, ஆனால் நாங்கள் நிலைமையை திறம்பட சமாளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
இந்திய பசுக்களின் குடலில் “பாக்டீரியாவின் தொழிற்சாலை” உள்ளது- ஆளுநர் உரை
கோதுமை உற்பத்திக்கு வேட்டு வைக்கும் வெப்பநிலை-விவசாயிகளுக்கு எச்சரிக்கை
Share your comments