விவசாயச் சங்கத் தலைவர் டி.வேணுகோபால் பேசுகையில், ''விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் மனித-விலங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறியுள்ளார். எனவே, இது சார்ந்து விவசாயிகள் ஒன்று கூடிப் பேசி அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் விளைநிலங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ விவசாய பட்ஜெட்டில் எந்த திட்டமும் முன்முயற்சியும் இடம்பெறவில்லை என தமிழக விவசாயிகள் சங்கம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இது குறித்த நடவடிக்கைகள் தேவை எனவும் விவசாயிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
சங்கத் தலைவர் டி.வேணுகோபால் பேசுகையில், ''விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் மனித-விலங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அதிக வருத்தம் தரும் பிரச்னையாக இது உள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தீர்வு காண வேண்டும்” என்றுள்ளார்.
இத்தகைய பிரச்னைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், மனுக்கள் கொடுத்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வனவிலங்குகள் புகுந்ததால் சில விவசாயிகள் நிலத்தை விற்று விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இருப்பினும், அரசாங்கம், தனது பட்ஜெட்டில், வன விலங்குகள் தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதற்காக ஒரு குழுவை உருவாக்குவதாக மட்டுமே அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்காத நிலை ஏற்படும் எனவும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை மற்றும் சிறுமுகை தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து பலகைகளை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, வனவிலங்குகள் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் விவசாயிகளை சந்தித்து, அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஒன்றுகூடி, முதல்வரை சந்திக்க சென்னைக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்,'' என்றும் விவசாயச் சங்கத் தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பன்றிக்காய்ச்சல் அச்சம்! நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்ட 20 பன்றிகள்!!
Share your comments