சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி முற்றுகையிட்டனர். இந்நிலையில் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரும்பு கொள்முதலில் டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல புறப்பட்டனர். காவல்துறை தடுத்தும் அவர்கள் பேரணியைத் தொடர்ந்ததால் 250-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என்று அவர்கள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் விலை தர வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு சென்றுள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 தனியார் சர்க்கரை ஆலைகள், விவசாயிகள் பெயரில் கடனை வாங்கி ரூ.400 கோடிக்கு மேல் எடுத்துக் கொண்டு விவசாயிகளை கடனாளிகளாக்கி விட்டனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி
விதைப் பண்ணை அமைக்க அரசின் மானியம் இதோ!
தேசிய கடன் தீர்ப்பாயம் இந்த ஆலைகளை ஏலம் விடுவதற்கு முன்பாக, விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.400 கோடி கரும்பு பண பாக்கியை வட்டியுடன் முழுவதுமாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், 9.5 சதவீதம் பிழிதிறன் கரும்பு ஒரு டன்னுக்கு 2022-23-ல் ரூ.2,821 மட்டுமே விலையாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிருப்தி அளிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், மத்திய அரசு அறிவித்த தொகையுடன் ஒரு டன் கரும்புக்கு ரூ.620 மாநில அரசு விலையாக வழங்கி வருகின்றன.
தமிழகத்திலும் கரும்புக்கான பரிந்துரை விலையை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும் எனவும், மூடப்பட்டுள்ள ஆலைகளைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் வலுயுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தியபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக தொடர்ந்த பேரணியை, போலீஸார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி
Share your comments