விதைப்பதற்கு முன் விதையின் தரத்தை மேம்படுத்துவது குறித்து பின்வரும் தொழில்நுட்பங்களில் விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் பிரதி ஆங்கில மாதம், 15-ம் தேதி ஒரு நாள் கட்டணப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- விதையின் அடர்த்தி கொண்டு தரம் பிரித்தல்
- விதை ஊட்டமேற்றுதல்
- விதை முலாம் பூசுதல்
- விதை வண்ணமேற்றுதல்
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயப் பெருமக்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பெயரை கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரடி பதிவு வசதியும் உள்ளது.
தொலைபேசி: 0422-6611363
கைபேசிச 99650 66580 / 94422 10145
பயிற்சி நடைபெறும் இடம்: விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்.
- நேரம்: காலை 10.00 மணி
- ஒரு நாள் பயிற்சிக் கட்டணம் - ஒரு நபருக்கு ரூ.750/-
- பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
- ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும்.
மேலும் தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்
விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
மேலும் படிக்க:
TNPSC Group IV: உதவி ஜெயிலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! சம்பளம் மாதம் 35 ஆயிரம் வரை பெறலாம்
ரேஷன் கடையில் விவசாயிகளுக்காக அறிமுகமாகும் 'மைக்ரோ' ஏ.டி.எம்
Share your comments