1. செய்திகள்

மார்ச் 2-ல் SDAT விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்வு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Fitness Test for SDAT sports Instructor Posts will be held on 2nd March

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் திறன் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்வான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் திறன் தேர்வுகள் எதிர்வரும் 02.03.2023 அன்று காலை 7.00 மணி முதல் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் விளையாட்டுத்துறைக்கு தனி முக்கியத்துவம் வழங்கி வருகிறது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 187 நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு கிடைத்தது. அதனை தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் மீது ஆர்வம் கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் தனிநபர் மற்றும் குழுவினர் பங்கேற்கும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, ஜுடோ, கபாடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வூசு ஆகிய விளையாட்டுக்களுக்கான 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த டிசம்பர் 2022 மாதத்தில் நாளிதழ்களிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், 530-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளது. அவற்றில் முதல் நிலையாக அனைத்து இனங்களிலும் தகுதி பெற்ற 225 விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வுகள் கடந்த 29.01.2023 அன்று நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 189 விண்ணப்பதாரர்களுக்கு மூன்றாம் நிலை தேர்வாக 02.03.2023 அன்று நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் தபால் மூலமும், அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் 02.03.2023 அன்று காலை 7.00 மணிக்குள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். மேற்படி தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு யாதொரு மறு வாய்ப்பும் வழங்கப்பட இயலாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க:

OUAT உழவர் கண்காட்சி 2023 நிகழ்வு புவனேஸ்வரில் தொடங்கியது !

PM Kisan: 2000 ரூபாய் வந்துடுச்சா? இல்லையென்றால் உடனே இதைப் பண்ணுங்க!

English Summary: Fitness Test for SDAT sports Instructor Posts will be held on 2nd March Published on: 28 February 2023, 09:43 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.