பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான, ஃபிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Saving Days Sale தொடங்கியிருக்கிறது. இந்த விற்பனை ஜனவரி 17 முதல் தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
ஃபிளிப்கார்ட், இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேஜெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்திலும், பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த விற்பனையில், iPhone 12 சீரிஸ் இல் பம்பர் ஆஃபர் வழங்கி உள்ளது. நீங்கள் iPhone 12 Mini ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு, இந்த விற்பனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், iPhone 12 Mini ஐ விலையில் பாதிக்கும் குறைவான விலையிலேயே பெற்றிடலாம்.
Offers And Discounts in iPhone 12 Mini
Flipkart Big Saving Days Sale என்பது ஃபிளிப்கார்ட்டில் அறிவித்திருக்கும், புதிய தள்ளுபடி சலுகையின் பெயராகும். iPhone 12 Mini இன் சந்தை விலை ரூ. 59,900 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் (Flipkart Sale) விற்பனையில், இந்த போன் ரூ.41,999க்கு வாங்கலாம். அதாவது போனுக்கு 29% தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடதக்கது. இந்த போனில் கூடுதலாக, ரூ.17,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இது போனின் விலையை மேலும் குறைக்க வல்லது.
iPhone 12 Mini வங்கி சலுகைகள்
ICICI கிரெடிட் கார்டு மூலம் போன் வாங்க பணம் செலுத்தினால், ரூ.750 தள்ளுபடி பெறலாம். அதன்படி போனின் விலை ரூ.41,249 ஆக இருக்கும். இதன் பிறகு, இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இருப்பது குறிப்பிடதக்கது.
iPhone 12 Mini Exchange சலுகைகள்
iPhone 12 Mini இல் ரூ.11,750 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் தள்ளுபடி பெற்றிடலாம். உங்கள் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.11,750 தள்ளுபடி கிடைக்கும். அதன்படி போனின் விலை ரூ.29,499 ஆக குறையும் வாய்ப்பு உள்ளது. அதாவது, போனில் ரூ.30,401 தள்ளுபடி பெறலாம்.
மேலும் படிக்க:
PM-KMY: திட்டத்தின் கீழ், ஓய்வு ஊதியம் பெற எவ்வாறு பதிவு செய்வது?
திடீரென அதிகாலை முதல் மழை, மேலும் 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு!
Share your comments