தொடரும் பனிப்பொழி எதிரொலியால், கோயம்பேடு பூ சந்தையில், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தொடரும் பனிப்பொழிவு காரணமாக, பூக்களின் (Flowers) விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பூக்கள் விலை உயர்வு (Flowers Price Raised)
கோயம்பேடு சந்தையில், தினமும் 100 லாரி பூக்கள் வந்த இடத்தில், தற்போது 30 முதல் 35 லாரி பூக்கள் மட்டுமே வருகின்றன. நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 'ஐஸ்' பெட்டியில் மல்லிகை பூ (Jasmine) வரத்து உள்ளது. சபரிமலை சீசன் மற்றும் மார்கழி மாத பிறப்பு உள்ளிட்ட காரணங்களால், கோவில் பூஜைகளுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு
தேவை அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவால், பூக்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பூ சந்தையில், நேற்று 1 கிலோ மல்லிகை பூ- 2,000 - 2,500 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை பூ- 1,500 - 1,800; கனகாம்பரம் 700 - 800; ஜாதி மல்லி 450 - 600, ரோஜா 150 - 180 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் படிக்க
கோயம்பேடு சந்தையில் இடமளித்தும் தக்காளி விலை குறையாதது ஏன்? - உயர்நீதிமன்றம்
Share your comments