க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து ஏற்பாடு செய்துள்ள மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வின் முதன்மை மற்றும் டைட்டில் ஸ்பான்ஸராக இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் நிறுவனமான ”மஹிந்திரா டிராக்டர்ஸ்” இணைந்ததாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், MFOI நிகழ்வின் மற்றொரு இணை ஸ்பான்ஸராக FMC கார்ப்பரேஷன் இணைந்துள்ளது.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையிலும் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 16 பிரிவுகளில் விவசாயிகள்/மீனவர்கள்/ கால்நடை பராமரிப்பாளர்கள் என பலரும் இந்தியா முழுவதுமிருந்து விருதுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
Title Sponsorship: மஹிந்திரா டிராக்டர்ஸ்
வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI விருது வழங்கும் விழாவுடன், வேளாண் கண்காட்சியும் நடைப்பெற உள்ளது. இதனிடையே, விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்துள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் அசைக்க முடியாத நம்பர் 1 டிராக்டர் பிராண்டாகவும், உலகிலேயே அதிகமாக டிராக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.
40-க்கும் மேலான நாடுகளில் செயல்பட்டுவரும் மஹிந்திரா, டெமிங் விருது மற்றும் ஜப்பானிய தர பதக்கம் ஆகிய இரண்டையும் வென்ற உலகின் ஒரே டிராக்டர் பிராண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஸ்பான்ஸர்: FMC கார்ப்பரேஷன்
நவம்பர் 16, வியாழன் அன்று MFOI ஒரு புதிய ஸ்பான்சரை அறிவித்தது. வேளாண் தொழிலுக்கான பூச்சிக்கொல்லி மருந்து உட்பட இராசயன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்படும் FMC கார்ப்பரேஷன் தான் புதிய இணை ஸ்பான்ஸராக இணைந்துள்ளது.
MFOI Awards 2023 நிகழ்வின் முதன்மை ஸ்பான்ஸராக இணைந்தது மஹிந்திரா டிராக்டர்ஸ்
எஃப்எம்சி கார்ப்பரேஷன் என்பது பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க இரசாயன உற்பத்தி நிறுவனமாகும், இது 1883 இல் பூச்சிக்கொல்லி தயாரிப்பாளராக உருவானது மற்றும் படிப்படியாக பிற தயாரிப்புகளிலும் நிறுவனம் விரிவடைந்தது.
இந்திய கால்நடை மருத்துவ சங்கம், இந்திய தேசிய விதை சங்கம், தோபா (Thofa), அனைத்து கேரள கோழி கூட்டமைப்பு ஆகியவையும், டிஜிட்டல் மீடியா பங்களிப்பாளராக டெய்லி ஹன்ட் (Daily Hunt) ஆகியனவும் இணைந்து MFOI 2023 Sponsored by Mahindra Tractors நிகழ்வினை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
அறுவடைத் தேதியே 15 நாட்களுக்கு முன்னரே தெரிவிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
PMFBY- விவசாயிகள் 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கலனா பிரச்சினையா?
Share your comments