மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பயனாளிகளின் நலனிற்காக நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கான ஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒதுக்கீடு
நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் கொரோனா காலத்தில் அன்றாட உணவிற்கே திண்டாடி வந்தனர். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அரசி, கோதுமை போன்ற உணவு தானியங்களை அளித்து வந்தது.
கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு இதுவரை, பலமுறை கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீடிக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் 2022 உடன் இறுதியாக இந்த திட்டம் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து இந்த திட்டம் நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மேலும், 3 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் வரை இத்திட்டத்தை நீடித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை இத்திட்டம் நீடிக்கப்பட்ட நிலையிலும், மத்திய அரசிடம் இருந்து அக்டோபர் மாதத்திற்கான தானிய ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என்றும், இதனால் அக்டோபர் மாதத்திற்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் எழுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க
நவம்பர் 30-க்குள் ரேஷன் கார்டுகள் ரத்து: புதிய விதிமுறைகள் வெளியீடு!
Share your comments