வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கோர்ட்டுக்கு செல்வோம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்த புதிய வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக குற்றம்சாட்டி வரும் விவசாயிகள், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் பெரும் பங்கும் இருப்பதாகக் கூறி அண்மையில் அந்த நிறுவனத்தின் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கேபிள்களை சேதப்படுத்தியும், உள்கட்டமைப்புகளை சேதப்படித்தியும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளக்கம்
விவசாயிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும், எந்த விவசாய நிலத்தையும் வாங்குவதாக இல்லை என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிமன்றத்தை அணுகும் ரிலையன்ஸ்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் சேதப்படுத்தி உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தினை அணுகப்போவதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் 1,500 மொபைல் டவர்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணியில், சில வர்த்தகப் போட்டி நிறுவனங்களும் இருப்பதாக ரிலையன்ஸ் கருதுகிறது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு தலையீடு அவசியம்
விவசாயிகளின் போராட்டத்தை அரசு கவனம் கொண்டு தலையிட்டு முடிவு காணவேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்டோருக்கு தக்க தண்டனை வழங்கவும் இனி வன்முறையில் ஈடுபடாதவாறு அச்சுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தலையீடு அவசியம் என்றும் கோரி பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்போவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!
Share your comments