1. செய்திகள்

மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்திக்கு மானியம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

மோகனூர் வட்டார தோட்டக்கலைத் துறையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், இயற்கை முறையில், ஒரு குடும்பத்துக்கு தேவையான காய்கறிகள் உற்பத்தி செய்ய, தோட்டக்கலை துறை மூலம், காய்கறி பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

அவற்றுடன், இயற்கை உரங்கள் அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ், டிரைகோ டெர்மா விரிடி மற்றும் வேப்ப எண்ணெய் அடங்கிய தொகுப்பு, மாடிப்பகுதியில், செடிகள் வளர்க்க தேவைப்படும் கோகோ பீட் அடங்கிய பைகள், ஆறு என, மொத்தம், இரண்டு கிலோ இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மானிய தொகுப்பு 

தொகுப்பின் மொத்த விலை, 850 ரூபாய். அதில், மானியம், 340 ரூபாய் போக, மீதம் 510 ரூபாய் செலுத்தினால் போதும். மேலும், மாடிவீட்டு பகுதிகளில், காய்கறிகள் தோட்டம் இயற்கை முறையில் வளர்ப்பதற்கு, சொட்டுநீர் உபகரணங்களுடன் அடங்கிய காய்கறி பெட்டகம் மானியத்தில் வழங்கப்படுகிறது. மொத்த விலை, 1,000 ரூபாய். அதில், மானியம், 400 ரூபாய் போக, 600 ரூபாய் செலுத்தினால் போதும்.

தேவைப்படும் ஆவணங்கள் 

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் மோகனூர் வட்டார தோட்டக்கலை துறையை அணுகலாம். விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சுரேஷ், 99774 21299, கார்த்திக், 99431 09006, கோபி, 86106 38415 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!

 

English Summary: The Department of Horticulture said that the subsidy will be provided for oragnic farming in the terrace garden. Published on: 05 January 2021, 04:08 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.