1. செய்திகள்

முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கிருஷி ஜாக்ரன் வருகை!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Former Chief Justice P Sadashivam visited Krishi Jagaran

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளாவின் முன்னாள் ஆளுநருமான பி சதாசிவம் (பழனிசாமி சதாசிவம்) கிரிஷி ஜாகரனைச் சந்தித்தார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளாவின் முன்னாள் ஆளுநருமான பி சதாசிவம் (பழனிசாமி சதாசிவம்) கிரிஷி ஜாகரனைச் சந்தித்தார்.ஐசிஏஆர் விலங்கு அறிவியலின் முன்னாள் டிடிஜி மற்றும் துவாசு மதுராவின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். கேஎம்எல் பதக், சோனாலிகா குழுமத்தின் மூலோபாய விவகாரத் தலைவர் பிமல் குமார், தாவர அடிப்படையிலான உணவுத் தொழில் சங்கத்தின் செயல் இயக்குநர் சஞ்சய் சேத்தி, அக்ரி விஷன் பேச்சாளர் டாக்டர். விவி சதாமத்தே ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவரையும் கிருஷி ஜாகரன் உறுப்பினர்கள் கரவொலியுடன் வரவேற்றனர். கிருஷி ஜாகரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டொமினிக் மற்றும் இயக்குனர் ஷைனி டொமினிக் ஆகியோர் விருந்தினர்களை பரிசுகள் வழங்கி வரவேற்றனர்.

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பவானி, காடப்பநல்லூர் என்கிற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சதாசிவம், அரசுப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 1973 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 1996 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன்பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தார். 2007 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு 40-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பதஞ்சலி சாஸ்திரிக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த தமிழர் என்கிற பெருமையும் பெற்றார். தான் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை திறமையாக கையாண்டு அதற்கு தீர்வு கண்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஓய்வுப்பெற்ற நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுநராக பதவி வகித்த சதாசிவம் 2019 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்றார்.

இப்போது 2019க்குப் பிறகு அவர் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்.. தனது சொந்த கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் தென்னை, கரும்பு மற்றும் வாழையை முக்கியமாக பயிரிடுகிறார்.

பிரதமருடனான சந்திப்பில், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் சாமானிய விவசாயிகளைச் சென்றடையவில்லை என்றும், எனவே இத்திட்டம் குறித்த தகவல்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி, அனைத்து உள்ளூர் மொழிகளிலும் மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகளுக்காக கிருஷிஜாகரன் செய்து வரும் பணிகளைப் பாராட்டிய அவர், கிருஷிஜாகரன் மேலும் வளர்ச்சியடைய உறுதுணையாக இருப்பேன் என்று தெளிவுபடுத்தினார்.

விருந்தினராக வந்திருந்த அனைவரும் கிருஷி ஜாகரின் பணியை பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்...

மேலும் படிக்க

விவசாயிகளை விட அதிகம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் தான்- முன்னாள் CJI சதாசிவம்

தந்தையின் மறைவால் விவசாயத்தில் இறங்கிய மகள்- கைக்கொடுத்த மிளகாய்!

English Summary: Former Chief Justice P Sadashivam visited Krishi Jagaran Published on: 18 June 2023, 04:54 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.