1. செய்திகள்

தெற்கு ரயில்வேயின் இலவச Wi-Fi ஏற்பாடு! ரயில்வேத்துறை அமைச்சகம் முயற்சி!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Southern Railway Free Wifi Arrangement

இந்தியாவில் தற்போது இருக்கும் ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. அதில் இலவச வைபை(Free Wi-fi) வசதியும் அடங்கும். இதற்காக ’ரயில் டெல்’ நிறுவனத்தின் உதவியுடன் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின் 542 ரயில் நிலையங்களில் வைபை வசதியை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.

இலவச வைபை வசதி(Free Wi-Fi facility)

தமிழகத்தை(tamilnadu)பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 185 ரயில் நிலையங்களில் வைபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு ரயில் டெல் நிறுவனத்துடன் இணைந்து இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 542 ரயில் நிலையங்களில் வைபை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி(Passengers delight)

விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைபை வசதி அமைக்கப்படும். பொதுவாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் ரத்து, பணப் பரிமாற்றம், போட்டித் தேர்வுகளுக்கான தகவல்களை பெறுதல் உள்ளிட்ட விஷயங்களுக்காக இணைய வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலவச வைபை வசதியானது பயணிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜிபிஎஸ் கடிகார வசதி(GPS clock facility)

இதன்மூலம் ரயில் நிலையங்களில் இணைய வசதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பாக்கலாம். மேலும் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய கடிகாரங்களை ரயில்வே கட்டுப்பாட்டு அறைகளில் பொருத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் காட்டும் வெவ்வேறான நேரங்களால் ரயில் விபத்துகள் ஏற்பட்டிருப்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

இதனை தவிர்க்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளில் ஜிபிஎஸ் கடிகாரங்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் செக்‌ஷன் கன்ட்ரோலர், ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் மற்றும் பிற ரயில்வே ஊழியர்கள் ஒரே மாதிரியாக நேரத்தை பெற்று தவறுகளின்றி பணி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்டுகிறது.

மேலும் படிக்க:

Indian Railways News: ரயில்வே பயணிகளுக்கு ஒரு சிறந்த Offer! அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

சென்னை சென்ட் ரல், எழும்பூர் உட்பட 19 ரயில் நிலையங்களை மேம்படுத்த இந்தியா ரயில்வே முடிவு

English Summary: Free for everyone: Free wifi Southern Railway Arrangements! Published on: 02 August 2021, 09:52 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.