1. செய்திகள்

மக்காச்சோளம் குறித்த இலவசப் பயிற்சி! நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!!

Poonguzhali R
Poonguzhali R
Free Maize Training! Calling to Namakkal farmers!!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (ஜீலை 14.07.2023, வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மக்காச்சோளம் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு விவசாயிகள் வருகை தந்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை "மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை" என்ற தலைப்பிலான ஒருநாள் இல்வச பயிற்சி நடைபெற இருக்கிறது.

மக்காச்சோளம் குறித்த இந்த பயிற்சியின் முக்கியத்துவங்கள் வருமாறு:

  • மக்காச்சோள பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
  • இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிலணந்த முறையில் கட்டுப்படுத்தும்
    முறைகள்
  • அதிக மகசூல் தரும் புதிய இரகங்கள்
  • நுண்ணூட்ட உர மேலாண்மை முறைகள் ஆகியன குறித்துத் தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில், விவசாயிகள்,விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள தொடர்புக்கு 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்களைப் பதிவு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Tamil Scheme: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் கற்க புதிய திட்டம்!

பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!

English Summary: Free Maize Training! Calling to Namakkal farmers!! Published on: 13 July 2023, 01:47 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.