1. செய்திகள்

PM-Kisan Update முதல் இன்றைய வானிலை அறிக்கை வரை| ITOTY 2022| Mettur Dam

Deiva Bindhiya
Deiva Bindhiya

தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கௌரவ நிதித் திட்டமானது டிசம்பர் 1,2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் நிதி தேவைக்காகவும், சரியான பயிர் ஆரோக்கியம் மற்றும் அதிக விளைச்சலை உறுதி செய்திடவும் ஒன்றிய அரசினால் விவசாய குடும்பத்தில் நிலம் உள்ள ஒருவருக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- என மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகல்களுடன் தங்கள் பகுதிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து பிப்ரவரி 1,2019தேதிக்கு முன்னரே நிலம் இருப்பதனை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, விவசாய பணிகளுக்கென குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்மூலம் இன்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதைத் தொடர்ந்து, அணைக்கு வரும் 1லட்சத்து 15ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களுக்குட்பட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளீட்டோர் சற்று மேடான பகுதிக்குச் சென்று பாதுக்காப்பாக இருக்கும் படியும், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் படியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

New GST Rates: இன்று முதல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்களின் பட்டியல்!

விதைகள் 50% மானியத்தில்! யாரை அணுக வேண்டும்?

குடியரசுத் தலைவர் தேர்தல்: 99% வாக்குப்பதிவு

நாட்டின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தேர்தலில் 99 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில், பதிவான வாக்குகள் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. புதி. குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகம், புதுவையில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ1130 வரை மின் கட்டணம் உயர்கிறது. இரண்டு மாதங்களுக்கான மின் அளவீட்டில் உயர்த்தப்பட்டுள்ள, இந்த கட்டண நடைமுறைக்கான பரிந்துரைகளை மின்சார ஒழுங்கு ஆணையத்திடம், தமிழ்நாடு மின் வாரியம் அளித்துள்ளது. இதன்படி. 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

மேட்டூர் அணையில் நிரம்பிய தண்ணீர்! மக்கள் அவதி!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழ்நாசு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க:

PM Kisan திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இதை செய்ய வேண்டியது கட்டாயம்!

மீண்டும் சரிவை கண்ட தங்கம் விலை! ஆபரணத் தங்கம் விலை இதோ!

English Summary: From PM-Kisan Update to Today's Weather Report| ITOTY 2022| Mettur Dam Published on: 19 July 2022, 05:37 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.