1. செய்திகள்

FSSAI ஆட்சேர்ப்பு 2022: அரசு பணியில் சேர பொன்னான வாய்ப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya

FSSAI Recruitment 2022

FSSAI ஆனது உதவி மேற்பார்வையாளர், OA PA மற்றும் பிற பதவிகள் உட்பட பல பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இந்த பதிவில், ஆட்சேர்ப்பு செயல்முறை, தகுதி மற்றும் FSSAI தேர்வைப் பற்றிய விவரங்களை, நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்புக்கு, இந்தியா முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

FSSAI 2022 விண்ணப்பப் படிவம் (FSSAI 2022 Application form)

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

  • FSSAI இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.fssai.gov.in க்குச் சென்று பார்க்க வேண்டும்.
  • உங்கள் முன் தோன்றிய பக்கத்தின் அடியில் செல்ல வேண்டும், பின்னர், 'CAREERS' என்று லேபிளிடப்பட்ட விருப்பத்தைப் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் 'Apply online' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பதிவுசெய்து புதிய உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கவும்.
  • இதன் பின்னர், நீங்கள் இப்போது வேலை விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, தயார்.
  • உங்களின் தற்போதைய புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும், தொடர்புடைய ஆவணங்களையும் சேர்க்கவும்.
  • அனைத்து தரவையும் பூர்த்தி செய்த பிறகு, வகைக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தவும்.
  • அனைத்து தகவல்களையும் இருமுறை சரிபார்த்த பிறகு, SUBMIT பொத்தானைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee)

  • GEN/OBC-க்கான மொத்த விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும்.
  • SC/ST/WOMEN/EX SERVICEMAN-க்கான மொத்த விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்:
  • சமீபத்திய வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் (3 மாதங்களுக்கு மேல் இல்லை)
  • ஸ்கேன் செய்யப்பட்ட உங்கள் கையெழுத்தை பதிவேற்ற வேண்டும்.

காலியிடங்கள் மற்றும் தேவையான தகுதிகள் (Vacancies and required qualifications)

வெவ்வேறு தகுதிகளுடன் விண்ணப்பிக்க பல காலியிடங்கள் உள்ளன. சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். தொடர்புடைய பதவிக்கு விண்ணப்பிக்க படிகளைப் பின்பற்றவும்.

தேர்வு முறை (Exam pattern)

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அனைத்தும் FSSAI தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

எழுத்துத் தேர்வுகளில் பின்வருவன அடங்கும்:

  • பொதுத் திறன் (General Aptitude) - 25 கேள்விகள்
  • கணினி கல்வி (Computer literacy)
  • செயல்பாட்டு சோதனை (Functional test) - 75 கேள்விகள்

இது இரண்டு மணிநேர (MCQ)தேர்வு கேள்விகளாகும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும், நான்கு புள்ளிகள் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு புள்ளி கழிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

அனுமதி அட்டை விவரங்கள் (Admit Card Details)

அட்மிட் கார்டு தேர்வு தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். அனுமதி அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்குப் பிறகு, FSSAI தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், cutoff வெளியிடப்படும் போது தனிப்பட்ட மதிப்பெண்கள் வழங்கப்படும்.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், [email protected] ஐ, மின்னஞ்சல் செய்யவும்.

மேலும் படிக்க:

PM Kisan: 65 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2000 பெற வாய்ப்பு

இன்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் என்ன?

English Summary: FSSAI Recruitment 2022: Golden opportunity to join government service

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.