1. செய்திகள்

Lockdown: தமிழகத்தில் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு; பேருந்துகள் ஓடாது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Full curfew in Tamil Nadu from May 10 to 24th
Credit : Maalaimalar

தமிழகத்தில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாப் பரவல் (Corona spread)

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாப் பரவலைத் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

14 நாட்கள் முழுஊரடங்கு (14 Days Full Lockdown)

இதன் ஒருபகுதியாக, மே 10ம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி காலை 4ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

2 நாட்களுக்கு ஊரடங்கு இல்லை (No curfew for 2 days)

மேலும், மக்களின் முன்வசதிக்காக இன்று (மே 8) மற்றும் நாளை (மே 9) மட்டும் ஊரடங்கு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் (Restrictions)

விமானப் போக்குவரத்து (Air transport)

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.

இ-பதிவு முறை (E-registration system)

வெளிநாடுகள், இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களுக்கு இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

வணிக வளாகங்களுக்குத் தடை (Ban on shopping malls)

  • 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்குத் தடை.

  • மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்கத் தடை.

பார்சல் சேவை (Parcel service)

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.

தேநீர் கடை (Tea Shop)

தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.

விழாக்களுக்குத் தடை (Ban on ceremonies)

  • உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

  • அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.

  • மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை தொடரும்.

அரசு அலுவலகங்கள் (Government Offices)

அத்தியாவசியத் துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, போலீஸ், ஊர்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்கத் தடை.

வழிபாட்டிற்கு தடை (Prohibition of worship)

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.

    அனைத்து நாட்களிலும் தடை.

  • சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.

  • கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

  • பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

  • நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி இல்லை.

  • வாடகை டாக்ஸி மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு தடை.

உரிய ஆவணங்கள் (Relevant documents)

அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு, மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

மற்ற சேவைகள் (Other services)

  • உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களைத் தவிர மற்ற சேவைகளுக்கு அனுமதி இல்லை.

  • அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

  • காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

தளர்வுகள் (Relaxations)

  • நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

  • நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.

  • ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

  • மே 8 மற்றும் மே 9-ம் தேதிகளில் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

English Summary: Full curfew in Tamil Nadu from May 10 to 24k; Buses do not run! Published on: 08 May 2021, 10:53 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.