விவசாயத் துறையில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க விவசாயிகளுக்கு தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதற்காக காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜி-20 உறுப்பினர்கள் வலியுறுத்தினர் என்று வேளாண் செயலர் மனோஜ் அஹுஜா புதன்கிழமை தெரிவித்தார்.
இங்கு நடைபெற்ற ஜி20 முதல் விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தின் நிறைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அஹுஜா கூறியதாவது: காலநிலை நிதி என்பது விவாதிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும். நிதியுதவி அடிப்படையில் காலநிலை நிதியுதவியை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என்று உறுப்பினர்கள் கருதினர்.
காலநிலைக்கு ஏற்ற விவசாயம் அல்லது பசுமை விவசாயத்தை பின்பற்றினால் விவசாயிகளை ஊக்கப்படுத்தலாம் என்றும் உறுப்பு நாடுகள் பரிந்துரைத்துள்ளன. அதில் ஒன்று கார்பன் கிரெடிட், என்று அவர் தெரிவித்தார்.
விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஜி 20 நாடுகள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டன, என்று அவர் தெரிவித்தார்.
முதல் விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நான்கு முன்னுரிமை பகுதிகளில் காலநிலை ஸ்மார்ட் விவசாயமும் ஒன்றாகும்.
பருவநிலை மாற்றத்தால் விவசாயம் மற்றும் அதன் உற்பத்தித் திறனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. விவசாயத்தை காப்பாற்றி, அதை நீடித்து நிலைக்க உதவுவது குறித்து ஆலோசித்தோம்.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை வரைபடமாக்குதல் மற்றும் ஆராய்ச்சி நடத்துதல் போன்ற 'காலநிலை ஸ்மார்ட் விவசாயம்' நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்தியாவும் பகிர்ந்து கொண்டது, என்றார்.
"உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து" பிரச்சினையில், அஹுஜா கூறியாதவாது, "பூஜ்ஜிய பசி" (zero hunger) என்ற நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDG) ஒன்றை அடைவது குறித்த விவாதம் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"2018க்குப் பிறகு உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. இது கவலையளிக்கிறது. பசியைக் குறைக்க என்ன செய்யலாம் என்று நாங்கள் விவாதித்தோம்," என்று அவர் கூறினார்.
விவசாயத்தில் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும் மூன்றாவது முன்னுரிமைப் பகுதியில், விவசாயத்தில் 'பண்ணை முதல் நாட்டுப்புறம்' மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவது குறித்து விரிவான விவாதம் நடைபெற்றதாகச் செயலாளர் கூறினார். உற்பத்தியை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் இந்தியா ஏற்கனவே தனது கவனத்தை மதிப்பு சங்கிலி அணுகுமுறைக்கு மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் விவசாயத்தின் நான்காவது முன்னுரிமைப் பகுதியில், விவசாய ஆலோசனைகளை வழங்குவதற்கும் துல்லியமான விவசாயத்தை நோக்கி நகர்வதற்கும் உதவும் அக்ரிஸ்டாக் திட்டத்தைப் பற்றி இந்தியா பகிர்ந்து கொண்டது என்றார்.
"இந்த கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், சண்டிகர், வாரணாசி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள விவசாயம் குறித்த எதிர்காலக் கூட்டங்களில் மேலும் விவாதங்கள் தொடரும்" என்று அவர் மேலும் கூறினார்.
விவசாய பணிக்குழுவின் (AWG) முதல் G20 விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தின் மூன்று நாள் நிகழ்வு புதன்கிழமை நிறைவடைந்தது.
FAO, IFAD மற்றும் IFPRI போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 100 பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விவசாயம் தொடர்பான எதிர்கால கூட்டங்களில் மேலும் 10 நாடுகள் அழைக்கப்படும் என்று செயலாளர் கூறினார்.
மேலும் படிக்க
ரூ.500 நோட்டுகளுக்கு தடையா? ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு!
Share your comments