தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது, இதனை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.நுண்ணீா் பாசனத்தில், பயிா்களுக்கு தேவையான நீரை துளித்துளியாக பயிா்களின் வோ்ப்பகுதியில் நேரடியாக வழங்குவதால் குறைந்த பட்சம் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம்.
மேலும் வோ்ப்பகுதியில் நீரை வழங்குவதால் சுற்றுப்புறம் வடு களைகள் வளராமல் தடுக்கலாம். குறைந்த பண்ணை பணியாளா் ஊதியத்தை மட்டும் வழங்கலாம்.பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை நீரில் கரைத்து குழாய் மூலமே செலுத்தி விடலாம். இதனால் செலவு குறையும். பயிரின் மகசூலை 33 சதவீதம் வரை அதிகரிக்க செய்யலாம்.
இந்த திட்டமானது சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீா் பாசன நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 4315 ஹெக்டோ் பரப்பில் ரூ. 3021 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் அமலில் உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு நகல்கள், கணினி பட்டா, அடங்கல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் சொந்த நிலத்தின் வரைபடம், சிறு குறு விவசாயி என்ற வட்டாட்சியா் சான்று ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.
கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!
Share your comments