1. செய்திகள்

கோவையில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு

Harishanker R P
Harishanker R P

உற்பத்தி பொருட்களை உலகளாவிய சந்தைப்படுத்துவதற்கும், பாரம்பரிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் உலக இயற்கை உழவர்கள் மாநாடு கருத்தரங்கம் காட்சிக்கூடம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூட்டமைப்பு மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை அருகே உத்தங்குடி ஏ ஆர் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தருமான முனைவர்  கே ராமசாமி தலைமையற்றார். ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பி.ஆர்.பாண்டியன் முன்னிலையேற்றார்.

கூட்டத்தின் முடிவில் பி ஆர் பாண்டியன் கூறுகையில், தமிழ்நாட்டில் பாரம்பரிய வேளாண் உற்பத்தியில் பெரும்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்கிறார்கள். பாரம்பரிய வேளாண் முறைகளை பயன்படுத்தி குறைந்த செலவில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள்.

உற்பத்தி பொருட்களை உலகளாவிய சந்தைப்படுத்துவதற்கும், பாரம்பரிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் உலக இயற்கை உழவர்கள் மாநாடு கருத்தரங்கம் காட்சிக்கூடம் கோவையில் செப்டம்பர் 12 13 14 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. உலக புகழ்மிக்க இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாடு இயற்கை விவசாயத்தை உலகளாவிய அளவில் விவாதத்திற்கு கொண்டு செல்ல வழிகாட்டும் வகையில் அமையும்.

மேலும், இந்திய அரசு வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்திய மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உரிய விலையில் சந்தைப்படுத்துவதற்கு உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு மத்திய மாநில அரசுகள் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

உணவுப் பொருட்களஉற்பத்தி செய்யும் குழுக்கலான நிறுவனங்களை கம்பெனி சட்டத்தின் கொண்டு வரப்படுவதால் வருமான வரி கணக்கு செலுத்துவதில் நிர்வாக முரண்பாடுகள் ஏற்பட்டு சங்கம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே முடக்கப்படும் நிலை ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தில் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வருமானவரி மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்களித்து சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அடுத்த கூட்டம் வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்றார்.

மதுரை வர்த்தக சங்க தலைவர் ரெத்தினவேலு பேசும் போது : விவசாயிகளுக்கு சந்தை படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் எங்களுடைய நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.உணவுப் பொருட்களை சேமித்து வைத்து லாபகரமான விலையில் விற்பனை செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கான குளிர்சாதன கிடங்குகள்,தரம் பிரிப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். விரைவில் ஆய்வுக் கூடங்களையும் நிறுவி  உலகலாவிய சந்தையில் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொழில் நுட்பங்களை வழங்க தயாராக உள்ளோம். விவசாயிகளோடு எங்கள் நிறுவனம் இணைந்து செயலாற்றி உணவு உற்பத்தி பெருக்குவதற்கு தொடர்ந்து முன் முயற்சி எடுத்து வருவதாகவும், விவசாயிகள் மேம்பபட எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னாள் துணைவேந்தர்  கே ராமசாமி கூறுகையில், இந்தியாவிற்கு தேவையான உணவுப் பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்து வருவதோடு,52 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகின்றனர். சுமார் 14 கோடி விவசாய குடும்பங்கள் கார்ப்பரேட்டுகளாக உயர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 72 நாடுகளுக்கு முழுமையாக உணவு ஏற்றுமதி செய்கிறோம். இதன் மூலம்102 நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஆறுகள் பாசன கால்வாய்களில் மரங்களை வளர்த்து காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை இந்திய விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார். நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் வாழை கருப்பையா, அஜித்தன்,மணி குட்டி, வேளாண் விஞ்ஞானி முத்தமிழ் செல்வன்தென்காசி ஷேக்முகைதீன், தேனி நாட்ராயன்.வானகம் ரமேஷ் உள்ளிட்ட முன்னணி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read more:

உலக வாழைப்பழ தினம் 2025: உலகிற்கு உணவளிக்கும் ஒரு பழம் - ஆரோக்கியம், வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை

சித்திரை முதல் நாள்; விவசாயம் செழிக்க 'நல்லேர்' பூட்டி உழவு பணியை தொடங்கிய

English Summary: Global natural farming conference to be held in Coimbatore

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.