பொங்கல் பண்டிகையை ஒட்டி நாமக்கல் மாவட்ட வாரச் சந்தையில் ஆடுகள் 3 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. நாமக்கல்லில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆடு ஒன்று 8 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி உள்ளது.
மேலும் படிக்க: ஆடு வளர்த்தால் அம்பானி ஆகலாம்! இன்றே தொடங்குங்க!!
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இச்சந்தைக்கு நாமக்கல், புதன் சந்தை, சேந்தமங்கலம், இராசிபுரம், எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: உச்சம் தொட்ட பூக்கள் விலை! அலைமோதும் மக்கள் கூட்டம்!!
விற்பனைக்காகக் கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதலான மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்ற வண்னம் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: Mutton Biryani: சுடச்சுட சுவையான மட்டன் கோலி பிரியாணி செய்முறை!
இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் ஆட்டுச் சந்தை நடைபெற்று இருக்கிறது. அதில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என்று மொத்தமாகச் சுமார் 40 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது.
இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை சென்றது. ஆட்டுக் குட்டியானது 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை சென்றது. ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தவர்கள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
நாமக்கல் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆட்டுச் சந்தை களைகட்டி இருக்கிறது. அதிக கிராக்கி காரணமாக விலை உயர்வு இருப்பினும் அதிக விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாகக் கருதப்படும் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகின்றது. தற்பொழுது பொங்கல் பண்டிகையால் விலை அதிகரித்து இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று ஆட்டுச் சந்தை அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில், வழக்கத்தை விட அதிக அளவு கூட்டம் அலை மோதியது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டன. நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரையிலும் விற்கப்படும் ஆடுகள் தற்பொழுது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
Share your comments