நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை. கொரோனாவிற்கு முன்பு 4 ஆயிரத்து 100 ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது 5 ஆயிரத்து 100யைத் தாண்டிவிட்டது.
இந்த விலை உயர்வு, நடுத்தர வர்க்கத்தினரையும், பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அப்படியானால், மனிதர்களைவிட தங்கத்திற்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது என்பதே உண்மை.
இது ஒருபுறம் என்றால், இத்தனை விலைகொடுத்து வாங்கும் தங்கத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
சிறுசிறுகச் சேர்த்து வைத்த தங்கத்தை எப்படி பாதுகாப்பது என நினைப்பவரா நீங்கள்?
உங்கள் கவலையைப் போக்க மத்திய அரசு புதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தங்க முதலீடு திட்டம்
இந்த திட்டத்தின் பெயர் Revamped Gold Deposit Scheme(R-GDS). மக்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள தங்கத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு.
இதன்படி, மத்திய அரசின் கண்காணிப்பி, உங்கள் தங்க நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வைக்க முடியும். தங்கத்தைக் கொண்டு தங்கத்தைப் பெருக்கும் இலவசத் தங்கத்திட்டம் இது.
டபுள் பெனிஃபிட்
இந்த திட்டத்தில் உங்களுக்கு டபுள் பெனிஃபிட் (Double Benefit) கிடைக்கிறது. அதில் ஒன்று, உங்களுடைய ஜொலிக்கும் தங்கத்திற்கும் பாதுகாப்பு. இரண்டாவது நீங்கள் வைக்கும் தங்கத்திற்கு வட்டியும் உண்டு.
இலவசத் தங்கம்
அவ்வாறு முதலீடு செய்யும் தங்கத்திற்கு வட்டியைக் காசாகவும் பெற்றுக்கொள்ளலாம். விரும்பினால், தங்கமாகவும் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் இலவசமாக தங்கத்தையும் நீங்கள் பெற முடிவதால், இது மைல்கல் பெனிஃபிட் தானே.
திட்டத்தின் அம்சங்கள்
இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு(NRI) அனுமதி இல்லை.
3 வகை முதலீடு
குறுகிய கால முதலீடு (1-3 வருடங்கள்).
நடுத்தர கால முதலீடு (5 -7 ஆண்டுகள்)
நீண்ட கால முதலீடு (12 – 15 )
இதன் மூன்றிலும் மத்திய அரசு சார்பாக முதலீடுகள் வங்கியால் பெறப்படும்.
எதனை முதலீடு செய்யலாம்?
தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், கல் பதித்த நகைகள், மற்றும் விலைஉயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை இந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் முதலீடு செய்து பலனடையலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
குறைந்தபட்சம் (Minimum)
ஒன்றரை லட்சம் மதிப்பிலான அதாவது 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்ய வேண்டும்.
அதிகபட்சம் (Maximum)
எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். உச்சவரம்பு கிடையாது.
வட்டி விகிதம்
குறுகிய கால முதலீட்டில், ஓராண்டிற்கு முதலீடு செய்யும் தங்கத்தின் மதிப்பில் இருந்து 0.5 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டு வரை 0.55 சதவீதமும், இரண்டு முதல் 3 ஆண்டு வரை 0.60 சதவீதமும் ஆண்டிற்கு வட்டியாக வழங்கப்படுகிறது. நடுத்தரகால முதலீடுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வீதம் வட்டி வழங்கப்படும். கூட்டு வட்டி கிடையாது.
மேலும் படிக்க...
தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!
எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்
Share your comments