Krishi Jagran Tamil
Menu Close Menu

இடிமின்னலுடன் கொட்டப்போகிறது கனமழை! எங்கன்னு தெரியுமா? - வானிலை மையம் சொல்லுது கேளுங்க!

Saturday, 01 August 2020 04:38 PM , by: Daisy Rose Mary
மழை

Credit By : Hindu Tamil

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கோவை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழைக்கு வாய்ப்பு

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 

கோவை, நீலகிரி, சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

மீனவர்களுக்கு எச்சரிக்கை

 • இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 • அந்தமான், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

 • இன்று மற்றும் நாளை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

 • கடலோர கேரளா, கர்நாடகா, லட்ச தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

 • இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய வானிலை மையம் அறிவிப்பு

இதனிடையே, கடந்த ஜூலையில் மழையில் அளவு இயல்பை விட 10 சதவீத பற்றாக்குறையுடன் முடிவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதில் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இயல்பான மழை பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!

எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்

Rain Heavy Rain Chennai Rain TN Rain மழை சென்னையில் மழை கன மழை மழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை ஆராய்சசி மையம்
English Summary: Heavy rain with thunder! Do you know where? - Listen to the chennai meteorological department!

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!
 2. தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
 3. PMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்!
 4. SSY:மாதம் 3000 முதலீட்டில் 17 லட்சம் ஈட்டும் மத்திய அரசின் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
 5. ''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு!!
 6. இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அழைப்பு!
 7. பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கால்நடை துறை
 8. கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!
 9. UYEGP : 5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!
 10. விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதி - பிரகாஷ் ஜவடேகர்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.