1,உச்சத்தில் தங்கம் விலை: 50,000 ரூபாய் வரை உயரும் என அதிர்ச்சித் தகவல்!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 5560 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 880 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 44,040 ரூபாயாக உயர்ந்ததே உச்சமாக இருந்தது. ஆனால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று (18/03/2023) தங்கம் விலை உயர்ந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஒரு சவரன் தங்கம் 50,000 ருபாயை எட்டும் என நகை விற்பனையாளர்கள் கணித்துள்ளனர்.
2,நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து, நேற்று விவசாயிகள் புறப்பட்டனர். மார்ச் 21 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத்தலைவர் வி.எஸ்.வீரப்பன், வடக்குமாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் அதிகமான விவசாயிகள், தங்கள் குடும்பத்தினருடன் நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டனர்.
3,பெண்களுக்காக “அவள்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிய முதல்வர்
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "அவள்" என்கிற புதிய திட்டம் மற்றும் மிதிவண்டி பயணத்தை தொடங்கி வைத்து, சிறப்புத் தபால் உறையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
"அவள்" திட்டத்தின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் அணுகுமுறை மற்றும் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு அம்ச பயிற்சி மற்றும் 2 உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி, "அவள்" திட்டம் சென்னை பெருநகர காவலில் செயல்படுத்தப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
4,தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம் தகவல்!
கோடைகாலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5,107 வயதான இயற்கை விவசாயி பாப்பாம்மாளின் காலினை தொட்டு வணங்கிய பிரதமர்
புது டெல்லியில் மார்ச் 18 ஆம் தேதியான நேற்று உலகளாவிய தினை மாநாடு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருதினை வென்ற பாப்பம்மாள் அவர்களும் பங்கேற்றார். மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்ற வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, பாப்பாம்மாள் அவர்களின் காலினை தொட்டு மரியாதை செலுத்தி வணங்கினார். பிரதமரின் இந்த செயல், தினை மாநாட்டில் பங்கேற்றவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. இயற்கை விவசாயியான பாப்பாம்மாளின் பணிகளை பாராட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6,TN அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (14 மார்ச் 2023) தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023" (Tamil Nadu Organic Farming Policy 2023) வெளியிட்டார்.
பண்ணை விளைபொருட்களுக்கு தமிழ்நாடு ஆர்கானிக் சான்றிதழ் துறை (TNOCD) வழங்கும் அங்கீகாரம், இப்போது கால்நடைகள் மற்றும் கோழிப் பொருட்கள், தேனீ வளர்ப்பு , அக்வா வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் பாலி கிரீன்ஹவுஸ் உற்பத்திக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்க ஒற்றைச் சாளர முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
7,கடலூரில் கால்நடை சார்ந்த பயிற்சி வகுப்புகள்
1) 21.03.2023 - கறவை மாடு வளர்ப்பு பயிற்சி,
2) 28.03.2023 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ,
பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142- 290249/ 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். என்று இத்தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் பகிர்ந்துள்ளனர்.
மேலும் படிக்க
107 வயதான தமிழக இயற்கை விவசாயி மூதாட்டியின் காலினை தொட்டு வணங்கிய பிரதமர்!
உச்சத்தில் தங்கம் விலை: 50,000 ரூபாய் வரை உயரும் என அதிர்ச்சித் தகவல்!
Share your comments