1. செய்திகள்

Gold price: காலையில் கண் திறந்ததும் ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை !

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Gold price: The price of gold rise 30 rupees per gram in chennai

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளத்தினை போல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக தங்கத்தின் விலை கணிசமான விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,570 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.30 அதிகரித்து ரூ.5,600 ஆக விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.240 வரை அதிகரித்து ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது.

வெள்ளி விலை:

அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.78 ஆகவும், கிலோ ஒன்றிற்கு 300 ரூபாய் வரை விலை அதிகரித்து ரூ.78,000 ஆகவும் விற்பனையாகிறது.

எதிர்பாராத இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மாதம் தொடங்கிய சில நாட்களில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்திருப்பவர்களின் கனவில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தங்கத்தை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம். சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும். BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் பட்டியல் கீழே உள்ள இணையதளத்தில் இங்கு காணலாம்.

https://www.manakonline.in/MANAK/AHCListForWebsite

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் விழிப்பாக இருங்கள்.

pic courtesy: unsplash

மேலும் காண்க:

தங்க நகை வாங்கின பில்லில் இதெல்லாம் இருக்கானு பார்த்தீங்களா?

English Summary: Gold price: The price of gold rise 30 rupees per gram in chennai Published on: 06 June 2023, 11:23 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.