1. செய்திகள்

25 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணி- மாவட்ட வாரியாக எந்தெந்த உழவர் சந்தை?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Reconstruction work in 25 uzhavar santhai at a cost of Rs.8.75 crore

தமிழகத்திலுள்ள 25 உழவர் சந்தைகளில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் 1999 ஆண்டு முதல் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை இடைத் தரகர்கள் யாருமின்றி அவர்களே நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டது.

இதனிடேயே மின்னணு சாதனங்கள் பொருத்துதல், மின்னணு எடை, வடிகால் மறுசீரமைப்பு, கூரை பழுது பார்த்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உழவர் சந்தைகளில் மேற்கொள்ள ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள 25 உழவர் சந்தைகளின் முழுவிவரம் பின்வருமாறு-

கோவை மாவட்டம்: (உழவர் சந்தை, புனரமைப்புக்கான நிதி)

  • மேட்டுப்பாளையம்- 47.80 லட்சம்
  • சுந்தராபுரம்-26.70 லட்சம்
  • சூலூர்-35 லட்சம்

செங்கல்பட்டு மாவட்டம்:

செங்கல்பட்டு உழவர் சந்தை- 36 லட்சம்

ஈரோடு மாவட்டம்:

பெரியார்நகர் உழவர் சந்தை- 34.25 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:

  • சங்கராபுரம்- 35.00 லட்சம்
  • உளுந்தூர்பேட்டை-35 லட்சம்

மதுரை மாவட்டம்:

  • திருமங்கலம்- 34.96 லட்சம்
  • உசிலம்பட்டி- 14.18 லட்சம்
  • ஆனையூர்- 18.56 லட்சம்

நாமக்கல் மாவட்டம்:

குமாரபாளையம்- 41.30 லட்சம்

புதுக்கோட்டை மாவட்டம்:

  • கந்தர்வகோட்டை- 35.00 லட்சம்
  • அறந்தாங்கி- 35.00 லட்சம்

சேலம் மாவட்டம்:

  • அஸ்தம்பட்டி- 7.50 லட்சம்
  • எடப்பாடி- 46.50 லட்சம்
  • இளம்பிள்ளை- 65.25 லட்சம்
  • தம்மம்பட்டி- 49.20 லட்சம்
  • ஜலகண்டாபுரம்- 41 லட்சம்

திருப்பூர் மாவட்டம்:

  • தாராபுரம்- 35.00 லட்சம்
  • பல்லடம்- 32.80 லட்சம்

திருப்பத்தூர் மாவட்டம்:

நாற்றாம்பள்ளி- 16.00 லட்சம்

திருவண்ணாமலை மாவட்டம்:

திருச்சி மாவட்டம்:

துறையூர்- 35.00 லட்சம்

வேலூர் மாவட்டம்:

காகிதப்பட்டறை- 47.00 லட்சம்

திண்டுக்கல்லுக்கு மாற்றாக செங்கல்பட்டு:

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பாட்டிலுள்ள மூன்று உழவர் சந்தைகளும் ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு உழவர் சந்தையினை புனரமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2023-2024 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், 25 உழவர் சந்தைகளில் ஏற்கெனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக மாற்றம் செய்யப்படவுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க உணவகங்களை மாற்றுவது தொடர்பான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!

English Summary: Reconstruction work in 25 uzhavar santhai at a cost of Rs.8.75 crore Published on: 06 June 2023, 12:38 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.