தங்கம் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தங்க முதலீட்டாளர்களுக்கும் நல்ல நேரம் வந்தாச்சு. தங்கம் வாங்க,தங்கத்தில் முதலீடு செய்ய, பங்கு சந்தை சூடு பிடித்துள்ளது. இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள் ஏனென்றால் வரலாறு காணாத விதமாக தங்கம் விலை கடந்த 4 நாட்களாக சரிந்து கொண்டே வருகிறது.
தங்கம் விலை தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.736 குறைந்துள்ளது. குறைந்து வரும் விலையால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் இருப்பதை காணமுடிந்தது. சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
செப்டம்பர் 16ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது. 17ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.352 குறைந்து அதிரடியாக பெரும் சரிவை சந்தித்தது, மேலும் ஒரு சவரன் ரூ.34,968 என்ற விலையில் விற்கப்பட்டது.18 ஆம் தேதி சவரனுக்கு ரூ.16 குறைந்தது. 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாள்.ஆகையால் சனிக்கிழமை குறைக்கப்பட்ட விலையிலேயே தங்கம் விற்கப்பட்டது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது, நேற்றும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது, கிராமுக்கு ரூ.9 குறைந்து,ஒரு சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34,880 என்ற விலையில் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக தங்கத்தின் விலை 4 நாட்களில் மட்டும் ரூ.736 குறைந்து சாதனை படைத்துள்ளது. மேலும் தங்கம் வாங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தற்போது கல்யாண சீசன் போன்ற பல விசேஷ நிகழிச்சிகள் வருகிறது. இதனால் விசேஷத்திற்கு தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயம் தங்கம் விலை மீண்டும் குறைய அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க:
தபால் அலுவலக திட்டம்: ரூ. 50,000 முதலீடு செய்து ரூ. 3300 ஓய்வூதியம்!
Share your comments