1. செய்திகள்

வாரத்தின் முதல் நாளில், சரிவுடன் தொடங்கிய தங்க விலை! விவரம் உள்ளே!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Gold prices started falling on the first day of the week! Details inside!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்வும் காணப்பட்டது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன? என்பதைப் பார்க்கலாம்.

ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற ஒரு பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இன்று மீண்டும் குறைந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் காணலாம் .

சென்னையில் இன்று (பிப்ரவரி 7, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,539 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,542 ரூபாயாக இருந்தது, குறிப்பிடதக்கது. அதேபோல், நேற்று 36,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 24 ரூபாய் குறைந்து 36,312 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று 4,955 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம் இன்று 4,952 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம், நேற்று 39,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம்(24 கேரட்) தங்கம் 24 ரூபாய் குறைந்து 39,616 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.90 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளி 64,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செய்தி: 

PM Kisan பயனாளிகளுக்கான, ஒரு நற்செய்தி! இரட்டிப்பு லாபம்!

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

தபால் அலுவலகத்தின் திட்டம்: முதிர்வு நேரத்தில் ரூ. 20 லட்சம் வரை பெறலாம்!

English Summary: Gold prices started falling on the first day of the week! Details inside! Published on: 07 February 2022, 04:04 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.