மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், முந்தைய அதிமுக அரசு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு, தமிழக அரசு சார்பில் உதவி வந்த திட்டங்கள் நிறுத்தி வைப்பு. ஏன், இதற்கான காரணம் என்ன?
இந்த திட்டத்தில், 1 பவுன் தங்கம் மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரம் வழங்கி வந்ததது. அதேநேரம், 12ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதிவித் தொகையாக வழங்கி வந்ததது. இந்த திட்டத்தை தாலிக்கு தங்கம் திட்டம் என்று அழைக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்காமல் கைவிட்டது. மேலும், கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமக கறவை மாடு வழங்குதல், நாட்டுக்கோழி வழங்குதல் போன்ற அதிமுக அரசின், மேலும் 2 திட்டங்களை திமுக அரசு நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு 2022ம் ஆண்டில் கறவை மாடுகள் மற்றும் நாட்டுக் கோழிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. மேலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த, கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செம்மறி ஆடுகளை வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு கட்டுப்படுத்து இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு தற்போதைய தமிழக அரசின் விளக்கம் (The current Tamil Nadu government's explanation for this):
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே பயனாளர்களுக்கு தாலிக்கு தங்கம் போய் சேர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். பேரவையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தினார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாலிக்கு தங்கத்திற்கு பதில் படிக்கும்போதே உதிவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments