1. தோட்டக்கலை

முந்திரி பருப்பு பயிர் லாபமா? என்னென்ன செய்ய வேண்டும்?

Deiva Bindhiya
Deiva Bindhiya

Is cashew nut crop profitable? What to do?

வேங்கை தனுஷின் பாணியில் கூற வேண்டும் என்றால், பதவியில் உயர்ந்தது மந்திரி, விலையில் உயர்ந்து முந்திரி என்பது உண்மைதான் அல்லவா. அவ்வாறு இருக்க தோட்டக்கலை மூலம், எவ்வாறு முந்திரி பருப்பை உற்பத்தி செய்யலாம் என்பதை , இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கான, சிறந்த மண், காலநிலை, பருவம், தாவரத்தின் தேவை, வயலை தயாரிக்கும் முறை மற்றும் பல குறிப்புகளை, இந்த பதிவில் பார்க்கலாம். மேலும், எவ்வாறு நடவு செய்தால் பயனளிக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மண் மற்றும் காலநிலை (Soil and climate):

இது அனைத்து மண்ணிலும் நன்றாக வளரும். சிவப்பு மணல் கலந்த களிமண் மிகவும் பொருத்தமானது. சமவெளிகளிலும், 600 - 700 அடி உயரமுள்ள மலைச் சரிவுகளும் பொருத்தமானதாகும்.

அறுவடைப் பருவம் (Harvest season):

ஜூன் - டிசம்பர் பருவம், சாகுபடிக்கு உகந்ததாகும்.

தாவரங்களின் தேவை(The need for plants):

இந்த தாவரத்தை, ஹெக்டேருக்கு சுமார் 200 செடிகளை நடலாம்.

வயல் தயாரித்தல் விவரம் (Field preparation detail):

45 செ.மீ x 45 செ.மீ x 45 செ.மீ அளவுள்ள குழிகளை தோண்டி வேண்டும். குழியில் மண், 10 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலவையை நிரப்ப வேண்டும், இது நல்ல பயன் தரும்.

இடைவெளி எவ்வளவு இருத்தல் வேண்டும்? (How much space should be there?):

இரு வழிகளிலும் 7 மீ இடைவெளி இருத்தல் வேண்டும், இது, உயர் அடர்த்தி நடவு எனவும் அறியப்படுகிறது. இடைவெளி 5 x 4 மீ இடைவெளியில் ஹெக்டேருக்கு 500 செடிகளுக்கு இடமளித்து, செடியின் உருத்தோற்றத்தைச் சீர்படுத்த வேண்டி அதன் கிளைகளை அல்லது கிளைப் பகுதிகளை நறுக்கி விட வேண்டும். இதனை, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

உரமிடுதல் (ஒரு செடிக்கு) (Fertilization (per plant)):

பயிரிட்ட பகுதியின் கிழக்கு திசையில், நவம்பர் - டிசம்பர் மாதங்களில் உரமிடலாம். முடிந்தவரை, ஜூன்-ஜூலை மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 2 சம அளவுகளில் உரத்தை கிழக்கு திசை பகுதியில் இடலாம், 1000:125:250 கிராம் NPK/மரம் என்ற உர அட்டவணை பரிந்துரைக்கப்படுகிறது.

இது நீண்ட கால பயிர் என்பதால் கட்டாயம் ஊடுபயிர் சாகுபடி நன்மை பயக்கும். எனவே, அதற்கான தகவல்களை அடுத்து பார்க்கலாம். சாகுபடி மழை பெய்த பிறகு இடையிடையே உழவு செய்து, மரங்கள் தாங்கும் வயதை அடையும் வரை நிலக்கடலை அல்லது பயறு வகைகளை அல்லது சிறு தினைகளை ஊடுபயிர்களாக வளர்க்கவும்.

பாசனம் (Irrigation):

பொதுவாக மானாவாரி பயிராக பயிரிடப்படும். விளைச்சலை அதிகரிக்க, காய்கள் முதிர்ச்சியடையும் நிலை வரை மேற்கில் ஒரு முறை நீர் பாய்ச்சுவது நல்லது.

பயிற்சி மற்றும் கத்தரித்தல் (Training and pruning):

தாழ்வான கிளைகளை அகற்றி 1 மீ உயரத்திற்கு தண்டாக செடியை வளர்க்கவும். உலர்ந்த கிளைகள், ஒவ்வொரு ஆண்டும் அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு செய்தால் கண்டிப்பாக நல்ல மகசூல் பெறலாம். மேலும், இந்த பயிரை சந்தைப் படுத்துதல் என்பது மிகவும் எளிதாகும். ஏனெனில் சந்தைகளில் முந்திரி பருப்பின் தேவை எப்போழுதும் உள்ளது. பண்டிகை நாட்கள் தொடங்கி, இனிப்பு வியபாரிகள் முதல் அனைவருமே முந்திரியின் தேவையில் உள்ளவர்கள் தான் என்பது குறிப்பிடதக்கது. மேலும், இதன் கால அளவு நீளம் என்பதால், ஊடுபயிர் கண்டிப்பாக செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

கறவை மாடுகள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

சென்னை: தங்கம் விலை உயர்வு: விலை என்ன?

English Summary: Is cashew nut crop profitable? What to do?

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.