கொரோனோ ஊரடங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், குறித்த நேரத்தில் தொடங்கிய பருவமழை, விவசாயிகளின் பயிர் விதைப்பை 87 சதவீதம் அதிகரிக்க உதவியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தைத் தடுத்து நிறுத்தியதுடன், விளைபொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை. ஆனால், பருவமழை விவசாயிகளுக்கு சற்று சாதகமானதாகவே அமைந்துள்ளது.
சாநகமான தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழையால், ஜூன் மாதம் பதிவான கனமழையால், நாடு முழுவதும் விவசாயப் பணிகள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, இதுவரை, பயிர் விதைப்பு 87 சதவீதம் அதிகரித்துள்ளது.
நெல்சாகுபடி 39 சதவீதம் அதிகரிப்பு
குறுவை பருவத்தில், நெல் சாகுபடி 39 சதவீதம் அதிகரித்திருப்பதுடன், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது. உணவு தானிய உற்பத்தி உபரியாக உள்ள நிலையில், பயிறு மற்றும் எண்ணெய் வித்துக்களை, அதிக பரப்பளவில் பயிரிட வேண்டியது அவசியம் என மத்திய வேளாண்மைத்துறை ஆணையர் எஸ்.கே. மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
பயிர் விதைப்பு
பீகார், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை பயிர் விதைப்பு பணிகளை அதிகரிக்க அடித்தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவசாயப் பணிகளுக்கு வர இயலவில்லை என்ற போதிலும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் விவசாயப் பணிகளை விவசாயிகள் லாவகமாக மேற்கொண்டுள்ளனர்.
நெல் மற்றும் பருத்தி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியாவில், இந்த ஆண்டு பருவமழை விவசாயிகளுக்கு அறுவடை சிறப்பாக அமைய வழிவகுத்துள்ளது.
பருத்தி விதைப்பு
இதேபோல், பருத்தி விதைப்பும் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள், தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக, நெல் சாகுபடியில் இருந்து பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளனர். அவர்களுக்கும், குறித்த நேரத்தில் தொடங்கிய பருவமழை சாதகமாக அமைந்திருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் தமிழகம் சாதனை படைக்கும் எனவும் வேளாண் உற்பத்தி ஆணையரும், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
கொரோனா காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை விடுகளில் சுத்தம் செய்வது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
Share your comments