நாடு முழுதும் 12 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியருக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி, அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டும் எச்சரிக்கை (Intimidating warning)
அடுத்தடுத்து அலைகளை உருவாக்கு மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா எனப்படும் கொலைகார வைரஸ், தற்போது 3-வது அலைக்குத் தயாராகி வருகிறது என்பது மருத்துவ உலகின் மாபெரும் எச்சரிக்கை.
எதிர்கொள்ளத் தயார் (Ready to face)
குறிப்பாக இந்த கொரோனா 3- அலை, குழந்தைகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மத்திய - மாநில அரசுகள் அதனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
அக்டோபரில் (In October)
இதன் ஒருபகுதியாக, 12-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா உறுதி அறிவித்துள்ளார்.
தடுப்பூசி தயாரிப்பு (Vaccine preparation)
பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்' மற்றும் சைடஸ் கடிலா நிறுவனத்தின் 'சைகோவ் - டி' ஆகிய குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை ஏற்கனவே துவங்கவிட்டன.
கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் இந்தியா நிறுவனம் 'கோவோவாக்ஸ்' என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி (Permission from the Central Government)
இதை, 12 - 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள சீரம் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த மாதம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அமித் ஷாவுடன் சந்திப்பு (Meeting with Amit Shah)
பின்னர் செய்தியாளர்களிடம் பூனாவாலா கூறுகையில், தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தடைஇன்றி செய்து வருகிறது. இதற்காக பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். நிதி நெருக்கடிகள் எதுவுமின்றி பணிகள் துரிதமாக நடக்கின்றன.
விரைவில் தடுப்பூசி (Vaccinate soon)
நாட்டில் 12 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியருக்கான இரண்டு டோஸ' தடுப்பூசியை அக்டோபரில் பயன்பாட்டுக்கு வருவதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதன் விலை குறித்து இப்போது உறுதியாக எதுவும் சொல்ல இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கொரோனா 3வது அலையின் அறிகுறி தென்படவில்லை- மருத்துவ நிபுணர் தகவலால் நிம்மதி!
விவசாயிகள் போராட்டத்தில் திடீர் திருப்பம்-எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு!
Share your comments