1. செய்திகள்

இ- பாஸ் நடைமுறையில் வரும் 17-தேதி முதல் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

அத்தியாவசிய காரணங்களுக்காக இ பாஸ் விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் 17-தேதி முதல் தடையின்றி அனுமதி வழங்கப்படும் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் (E-pass) விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், (E-Pass) அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த (Relaxations in E PASS practice) அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் E-pass விண்ணப்பம் செய்து, கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க.. 

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடை

தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!

வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!

 

English Summary: Government of Tamil Nadu announced Relaxations in E PASS practice

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.