விவசாய கடன் தள்ளுபடி குறித்து சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதில் யாருக்கெல்லாம் தள்ளுபடி ஆகும் என்பது குறித்து விவசாயிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிகாரம்
யாருக்கு விவசாய கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 5 ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
விவசாய கடன் தள்ளுபடி (Agri Loan Waiver)
5 ஏக்கர் வரையில் வைத்திருக்கும் விவசாயிகளுக்கே கடன் தள்ளுபடி என மாநில அரசு வரையறுத்தது சரியே என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.
கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக அரசின் கருத்துக்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் முக்கியத்துவம் கருதி முந்தைய உத்தரவையே தீர்ப்பாக வழங்குவதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க
உரத் தட்டுப்பாடு: உரத்தை பங்கிட்டு பயன்படுத்தும் விவசாயிகள்!
நகராட்சி பூங்காவில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் தூய்மைப் பணியாளர்களுத்கு இலவசமாக அளிப்பு!
Share your comments