அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக நிர்ணயித்த அரசாங்கம்அரசு, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக,கடந்த ஆண்டு 2020இல் அதிகரிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக மாற்றப்படுவதாக சட்டசபையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ். அறிவித்திருந்தார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய தி.மு.க., அரசு, ஓய்வு பெறும் 60 வயதை ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இப்போதைய சூழ்நிலையில், ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தால், ஓய்வு பெறுவோருக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும். தற்போதைய நிதி நெருக்கடியில் அது பெரும் சுமையாக இருக்கக்கூடும். எனவே, முதலில் 59 வயதாக குறைத்து விட்டு, அதன் பிறகு 58 ஆக குறைக்கலாம் என பரிசீலிக்கப்படுகிறது. இல்லையெனில், நேரடியாக 58 ஆக குறைத்து விட்டு, ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய தொகைகளுக்கு பதிலாக, உத்தரவாத பத்திரம் அளிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்படுகிறது. தற்போது ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஓய்வு பெறாமல் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
ஓய்வு பெரும் ஊழியர்களுக்கு பதிலாக ,புதிய நபர்களை தேர்வு செய்யும் போது, சம்பளம் குறைவாக வழங்கினால் போதும். இதனால் அரசின் செலவை குறைக்க முடியும் என்றும் நிதித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி, ஓய்வூதிய வயது குறைப்பு தொடர்பான அறிவிப்பை சட்டசபையில் வெளியிட வாய்ப்புள்ளது என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க:
பி.எம் கிசான் திட்டத்தின் 9-வது தவணை எப்போது? முழு விவரம் உள்ளே!!
10 ஆடுகள், 1000 கிலோ மீன்- ஆடிச் சீராகக் கொடுத்து அசத்திய மாமனார்!
Share your comments