மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜெனரல் வருங்கால வைப்பு நிதிக்கு (General Provident Fund) அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
GPF வட்டி விகிதம்
அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அமலில் உள்ள 7.1% வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும்.
இதுகுறித்து நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தீர்மானத்தில், ஜெனரல் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 7.1% வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் கீழ்காணும் திட்டங்களுக்கும் 7.1% வட்டி விகிதம் பொருந்தும்.
- பங்களிப்பு வைப்பு நிதி (Contributory Provident Fund)
- அனைந்திந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி (All India Services Provident Fund)
- ரயில்வே வைப்பு நிதி (State Railway Provident Fund)
- ஜெனரல் வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) - [General Provident Fund (Defence Services)]
- இந்திய ஆர்டினன்ஸ் துறை வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Department Providence Fund)
- இந்திய ஆர்டினன்ஸ் ஆலை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Factories Workmen's Provident Fund)
- இந்திய கடற்படை கப்பல் துறை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Naval Dockyard Workmen's Provident Fund)
- பாதுகாப்பு சேவை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Defence Services Officers Provident Fund)
- ராணுவ படை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Armed Forces Personnel Provident Fund)
மேலும் படிக்க
விவசாயிகள் வங்கி கணக்கில் மானியக் கடன்: விரைவாக விண்ணப்பிக்கவும்!
FD வட்டி உயர்வு: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!
Share your comments