கோவையில் நடைபெற்ற மாபெரும் விழா: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம்
அரசின் நலத்திட்டங்களை வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்துள்ளார். வருகை தந்த முதல்வரை எண்ணற்ற மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற மாபெரும் விழாவில் ஒரு லட்சத்து ஏழாயிரத்து அறுபத்து இரண்டு பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல், உதவித்தொகை வழங்குதல், மிதிவண்டி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு, ”தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற திருப்பூர் மண்டல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அதோடு, கோவையில் நிறுவப்பட்டுள்ள கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தைத் திறந்து வைத்ததோடு, அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அரசின் துறைகள் சார்ந்த கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். மேலும், 100 கோடிக்குத் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், வர்த்தகம் வரவுகள் தள்ளுபடி தளத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அவர்களது மனைவியர்க்கும் இலவசப் பயண அட்டை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது மனைவியர்க்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவசப் பயண அட்டை வழங்கப்படும் எனப் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதோடு, நிரந்தர பணியாளர்களின் துணைவியர்களூக்கும் இலவசப் பயண அட்டை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதோடு, கொரோனா காலக் கட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்குச் சிறப்பு ஊதியம் வழங்குதல், தையற்கூலி உயர்த்தி வழங்குதல் முதலானவைகளையும் அறிவித்துள்ளார். இவ்வறிவிப்புகள் ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது: 2 கிலோ குட்டி சிலிண்டர்
இந்தியன் ஆயில் நிறுவனம், முன்னா'என்று பெயரிடப்பட்டுள்ள, 2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்களை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கனை செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், 2 கிலோ சிலிண்டரை விற்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இந்த சிலிண்டரை, வாடிக்கையாளர்கள் 971 ரூபாய் செலுத்தி சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம். அதன் பின்பு, காஸ் தீர்ந்ததும், மாதந் தோறும் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்கான தொகை, இம்மாதம் 263 ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுச் சாணத்திலிருந்து வாகன எரிபொருள்: அரசின் புதிய திட்டம்
நாளுக்கு நாள், பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக பிற எரிபொருட்களைக் பயன்படுத்துவது குறித்து அரசுகள் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், மாட்டுச் சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்க ராஜஸ்தான் அரசு முன்வந்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான ஹெச்.பி.சி.எல். ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேந்துள்ள மாணவர்களின் எண்ணைக்கை இந்த ஆண்டு 72 லட்சமாக உயர்ந்துள்ளது எனத் தமிழகக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பின்பு தங்கள் படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்தது. அதோடு அவர்களுக்குத் தேவையான வசதிகள், இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கினர். மேலும், தனியார் பள்ளிகளில் படித்துக் கட்டணப் பாக்கி காரணமாக பாதியில் வெளியேறுபவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Global BioAgriculture Linkages & BioAgriculture Innovations நிறுவனத்தின் சிஇஓ கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை
புது தில்லியில் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகின்ற விவசாயப் பத்திரிக்கையான கிரிஷிஜாக்ரனுக்கு Global BioAgriculture Linkages & BioAgriculture Innovations நிறுவனத்தின் நிறுவனர் திரு Roger Tripathi இன்று வருகை தந்து உரையாற்றினார். கிரிஷி ஜாக்ரன் குழுவுடன் விவசாயம் சார்ந்த கருத்துக்கள் குறித்துக் கலந்துரையாடிப் பல்வேறு ஊக்கப்படுத்து கருத்துக்களைப் பகிந்துகொண்டார்.
மேலும் படிக்க
பள்ளிகளில் காலை உணவு: செப். 15-ஆம் தேதி முதல் தொடக்கம்!
அரசு தொழிலாளர்களுக்கும் அவர்களது துணைவியர்களுக்கும் இலவசப் பயண அட்டை அறிவிப்பு!
Share your comments