உத்தரவாதத்துடன் வருமானம் தரக்கூடிய உத்தரவாத பென்சன் திட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உத்தரவாத பென்சன் திட்டம் (Guaranteed Pension Scheme)
பென்சன் திட்டம் இந்திய குடிமக்களின் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு திட்டம் தான் NPS திட்டமாகும். மேலும், இந்த தேசிய பென்சன் திட்டத்தை (NPS) ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தான் நிர்வகித்து வருகிறது. 18 வயது பூர்த்தி ஆகிருந்தாலே தேசிய பென்சன் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதனிடையே, கூடிய விரைவில் உத்தரவாதத்துடன் வருமானம் தரக்கூடிய பென்சன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் அறிவித்திருந்தார்.
அதாவது, கடந்த 2003 ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன் கிடைத்து வந்தது. இதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் பலரும் பழையபென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், உத்தரவாத பென்சன் திட்டம் இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாக தயார் செய்யப்படும் என தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதத்துடன் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து, பென்சன் வழங்குவது தொடர்பாக நிதி மேனேஜர்கள், நிபுணர் குழு உறூப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பென்ஷன் திட்டம் முழுக்க முழுக்க புது வகையான திட்டம் என்பதால் அறிமுகம் செய்ய சில நாட்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வருமானம் எவ்வளவு விகிதத்தில் வழங்கப்படும் என்பதற்கான முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments