
தென்மேற்கு பருவக்காற்று (Monsoon2020) மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
குறிப்பாகத் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை - Chennai weather
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல இடங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
5 நாட்களுக்கு கனமழை
இதேபோல், அரபிக் கடலின் வடக்கு பகுதி, குஜராத்தின் சில பகுதிகள், மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், உத்தர்காண்டின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவழை சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், அடுத்த 5 நாட்களுக்குப் பரவலாகக் கனமழை முதல் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை எச்சரிக்கை
குறிப்பாக மேற்கு வங்கத்தின் இமயமலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் சிக்கிம் மாநிலத்தில், வரும் 25 மற்றும் 26ம் தேதிகள், அதாவது நாளையும், நாளை மறுநாளும், பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில், நாளை முதல் 27ம் தேதியும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் உத்தர்காண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு மிக மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும், இமயமலையின் மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க....
வேளாண் நிலங்களில் மரங்கள் நடும்போது கவனிக்க வேண்டியவை!
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி!
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!
Share your comments