வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
-
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது.
-
இதன் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
வானிலை முன்னறிவிப்பு(Weather Forecast)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
-
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஓட்டியே இருக்கும்.
-
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் BASL மணப்பூண்டியில் 17சென்டிமீட்டரும்,BASL முகையூரில் 16 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments