தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பினால் தற்போது 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அதிராம்பட்டினம், திருச்செந்தூர், மானாமதுரை, உளுந்தூரர்பேட்டை என்று தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உதயமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உதயமாகும் நகராட்சிகளின் பட்டியல் இதோ:
- சோழிங்கர்
- இடங்கனசாலை
- தாரமங்கலம்
- திருமுருகன் பூண்டி
- கூடலூர்
- காரமடை
- கருமத்தம்பட்டி
- மதுக்கரை
- வடலூர்
- கோட்டக்குப்பம்
- திருக்கோவிலூர்
- உளுந்தூர்பேட்டை
- அதிராம்பட்டினம்
- மானாமதுரை
- சுரண்டை
- களக்காடு
- திருச்செந்தூர்
- கொல்லன்கோடு
- முசிறி
- லால்குடி
- புகளூர் மற்றும் புகளூர் பேரூராட்சிகள் இணைப்பு
- பள்ளப்பட்டி
- திட்டக்குடி
- மாங்காடு
- குன்றத்தூர்
- நந்திவரம்
- கூடுவாஞ்சேரி
- பொன்னேரி
- திருநின்றவூர்
மேலும் படிக்க:
புதிய மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ள ஊர்கள்! விரைவில் அறிவிப்பு
Share your comments