உங்க ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை புதுப்பிக்கவோ அல்லது மாற்றவோ நீங்கள் விரும்பினால் அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்குச் சென்று எளிதாக மாற்றிக் கொள்ளலாம்!
ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆவணத்தில் ஒரு நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் உள்ளது. வருமான வரியை தாக்கல் செய்தல், பல்வேறு வகையான படிவங்களை நிரப்புதல், விமான பயணம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இந்த ஆவணம் பொதுவாக அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை பெரும்பாலானோர் விரும்புவது இல்லை. ஆதார் சேர்க்கையின் போது, அப்போதிருந்த கூட்ட நெரிசல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் குறைவால் நம்மை சரியாக புகைப்படம் எடுத்திருக்க மாட்டார்கள். அதனால் தற்போது ஆதாரிலுள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புபவர்கள் மாற்றிக்கொள்ளலாம். புகைப்பட மாற்றங்களுக்காக ஒவ்வொருவரும் அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பார்வையிட வேண்டும். இது தவிர, தபால் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.
இதற்கு ஆதார் அட்டைதாரர் அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்குச் செல்ல வேண்டும். ஆதார் அட்டை புகைப்பட புதுப்பிப்புக்காக அங்குள்ள ஆதார் நிர்வாகியிடமிருந்து புகைப்படத்தை மாற்ற விரும்புவதாக கூற வேண்டும். ஆதார் சேர்க்கை மையத்தில் புகைப்பட மாற்ற கட்டணமாக ரூ .25 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆதார் அட்டைதாரர் புகைப்பட மாற்றக் கட்டணத்தை செலுத்தியவுடன் அங்குள்ள நிர்வாகி புகைப்படத்தை மாற்றுவார். ஆதார் நிர்வாகி ஆதார் அட்டைதாரருக்கு புதுப்பிப்பு கோரிக்கை எண் (யுஆர்என்) உடன் ஒப்புதல் சீட்டு வழங்குவார்.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள்:
1: அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையம் அல்லது ஆதார் சேவா மையத்திற்கு செல்லவும்
2: UIDAI இணையதளமான https://uidai.gov.in/ என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள். ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கவும் (திருத்தம் படிவம் / புதுப்பிப்பு படிவம்)
3: படிவத்தை நிரப்பவும். படிவத்தை அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் சமர்ப்பித்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும்
4: அங்குள்ள நிர்வாகி உங்களை புகைப்படம் எடுப்பார்
5: இப்போது புதிய புகைப்படத்தை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிப்பார்கள். உங்களிடம் ரூ .25 + ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்
6: புதுப்பிப்பு கோரிக்கை எண் (Update Request Number-URN) கொண்ட ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்
7: புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க URN எண்ணை பயன்படுத்தி தகவலை பெறலாம்.
நீங்கள் ஆதார் சேவா கேந்திரத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால்…
1: முதலில், நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
2: ஆதார் அட்டை புதுப்பிப்பு திருத்தும் படிவத்தை இங்கிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3: பின்னர் அனைத்து தகவல்களும் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.
4: படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஆதார் அட்டை புதுப்பிப்புக்காக UIDAI பிராந்திய அலுவலகம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதப்பட்டு பின்னர் சுய சான்றளிக்கப்பட்ட படத்தை இணைத்து இடுகையிடவும்.
5: இது நடந்த இரண்டு வாரங்களுக்குள் புதிய புகைப்படங்களுடன் ஆதார் அட்டை கிடைக்கும்.
மேலும் படிக்க...
வங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை
ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள், இல்லையெனில் ரூ.10,000 அபராதம்!
Share your comments