1. செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் அதிவேக இணைய சேவை: அரசின் அருமையான திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
High speed internet

தமிழக அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதிவேக இணைய சேவை (High speed internet)

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி அன்று நடந்து முடிந்த பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தற்போது அரசு துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் தினமும் துறை வாரியாக நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சியினர் மற்றும் இதர கட்சியினரின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

நேற்று, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பான அரசின் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மனோ.தங்கராஜ் பேசியுள்ளார். அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள அரசின் அலுவலகங்கள் மற்றும் குடும்பங்களுக்கும் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளதாகவும், இதற்கான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசு அலுவக இணைய பணிகளுக்கு ரூ.184 கோடியும், 20,000 தமிழக குடும்பங்களுக்கான குறைந்த செலவிலான அதிவேக இணையத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Post Office கணக்கு இருக்கா? அப்போ இது கட்டாயம்: அரசின் முக்கிய உத்தரவு!

ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் சுட்டெரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

English Summary: High speed internet service across Tamil Nadu: Government's great project! Published on: 02 April 2023, 01:21 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.