வயலில் இறங்கி ஏர் பிடித்தால் மட்டுமே விவசாயம் அல்ல, அவை அல்லாமல் வீடுகளிலும் நம் தோட்டங்களிலும் சிறு சிறு முதலீட்டில் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். அந்த வகையில் குறைந்த மூதலீடுகளின் மூலம் அதிக லாபம் தரும் சில சுய தொழில் வாய்ப்புகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
விவசாய பண்ணை (Farming Business)
அளவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் விவசாய பண்ணையைத் தொடங்கலாம். ஆடு, மாடு கோழிகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தோப்பு பராமரிப்பு என ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து நல்ல லாபம் ஈட்டலாம். ஆடு மாடுகளில் இருந்து பால் விற்பனையும், கோழி மீன் வளர்ப்பில் இருந்து இறைச்சி விற்பனையும் செய்து, முட்டை விற்பனையும் என அதிகளவில் வியாபாரம் செய்யலாம். தோட்டம் தொரவுகளில் இருந்து உள்ளூர் தேவைக்கேற்ப நீங்கள் பொருட்களை தயாரித்து உள்நாட்டில் விற்கலாம். தொலைதூர பகுதிகளுக்கு நீங்கள் விநியோக அமைப்புகள் மூலம் கூட விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம்.
இயற்கை உரம் தயாரித்தல் (Natural Fertilizer)
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் விவசாய தொழில்களில் உரம் தயாரித்தலும் ஒன்று, குறிப்பாக பெண்கள் இந்த தொழிலை வீடுகளிலேயே செய்யலாம். வீடுகளில் கிடைக்க்கூடிய வேளான் கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கலாம். இதற்கு பல பயிற்சி வகுப்புகள் வேளாண் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மணோன்மனி என்பவர் இயற்கை உரம் தாயரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடி விவசாயியாக அறியப்படுகிறார். மேலும், இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சியும் அவர் அளித்து வருகிறார்.
லாபம் தரும் மரம் வளர்ப்பு (Tree Planting)
நீங்கள் இந்த தொழிலை தேர்வு செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். மற்ற பயிர்களைப்போல இரண்டு மாதத்தில் அறுவடை செய்ய முடியாது. அதனால் மிகவும் கவணமாக இந்த தொழிலை துவங்குவது நல்லது. நீண்டகால மரங்கள் மற்றும் குறுகிய கால மரங்கள் என இரண்டையும் வளர்பதால் வரும் காலங்களில் அதனை விற்று நல்ல லாபம் சம்பாதிக்கலாம். பழ மரங்கள் அன்றாட வருமானத்தைக் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த மரம், மற்றும் வாசனை நிறைந்த மரங்களும் இதில் அடங்கும். பொறுமையா இருந்து அதகளவில் லாபம் சம்பாதிக்கலாம்.
உலர்ந்த மலர்கள் (Dry Flowers Business)
மலர்கள் விரைவில் கெடும் பொருளாக இருப்பதால், இவற்றை நீண்ட நாட்கள் சாதாரண நிலையில் வைத்திருக்க இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது மலர்களை உலர்த்தி மதிப்பு கூட்டி உலர் மலர்கள் உற்பத்தியும் பெருமளவில் செய்யப்பட்டு வருகின்றது. மலர்கள் நன்கு உலர்த்தி பின்னர் அவற்றிற்குத் தேவையான வண்ணங்கள் கொடுத்து அலங்கார மலர்களாக்கி, நீண்ட காலத்திற்கு அழகு குறையாமல் சேமித்து வைக்க இயலும். உலர்த்தப்பட்ட மலர்கள் அதன் இலைகள், தண்டுகள், காய்கள் போன்றவற்றை கொண்டு சென்டு வளையம், வாழ்த்து மடல், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை சிறிய அளவில் குடிசைத் தொழிலாகவோ அல்லது தொழிற்சாலை தொழிலாகவோ செய்யலாம்.
காய் கனி மார்கெட் (Vegetables & Fruits shop)
நீங்கள் விவசாயம் சார்ந்த இடங்களில் வசிப்பவராக இருந்தால் உங்கள் பகுதியில் கிடைக்கும் காய், கனிகளை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து சேகரிப்பதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறி வணிகத்தை ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கலாம். தொலைபேசி உரையாடல், இணைய இணைப்பு கொண்ட கணினி போன்ற எளிதான தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம் இதைச் செய்யலாம். சிறு முதலீடு மூலம் இந்த தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
மருத்துவ மூலிகைகள் விவசாயம் (Herbal Farming)
வணிக மட்டத்தில் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பது மிகவும் இலாபகரமான விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. நீங்கள் மூலிகைகள் பற்றி நல்ல அறிவைக் கொண்டிருந்தால், போதுமான நிலம் இருந்தால், நீங்கள் மருத்துவ குணம் நிறைந்த் மூலிகைகள் வளர்ப்பதைத் தொடங்கலாம். துளசி, தூதுவளை, அகத்தி என பல்வேறு மூலிகைகளை வளர்க்கலாம். சில வகை மருத்துவ மூலிகை வணிகத்தில் நீங்கள் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து சில உரிமங்களை எடுக்க வேண்டியிருக்கலாம்.
மேலும் படிக்க....
வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!
வேளாண் துறையில் லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்காக அருமையான 20 யோசனைகள்
Share your comments