தமிழகச் சட்டப் பேரவையில் கல்வித்துறை சார்ந்த மானியம் குறித்துத் திங்கள் கிழமை(11.04.2022) விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளிட்டார்.
அறிவிப்புகளில் மிக முக்கிய மற்றும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அறிவிப்புத் திகழ்கிறது. அதாவது, பள்ளிகளுக்கு வர இயலாத 10,146 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திற்கே சென்று கல்வி வழங்க ரூ.8.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இவ்வறிப்பின் ஊடாக அரசு பள்ளி சார்ந்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களையும், அமைச்சர் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
- பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி மற்றும் இரவுநேர காவலர்கள் பணி போன்ற பள்ளிகளின் பராமரிப்புக்கு ரூ. 100 கோடி மதிப்பில் செயல்பாடுகள் செயல்படுத்தப்படும்.
- ஆயிரம் மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கட்டமைப்பு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
- கலவி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட இணைக்கல்வி வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பள்ளி சென்னையில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்படும்
- அறிஞர்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளும் அதன் தனிச் சிறப்பு மாறாமல் இருக்க ரூ. 25 கோடி மதிப்பில் புதுமை செய்யப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.
- அரசின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் 100 பள்ளிகளின் சிறந்த தலைமையாசிரியர்களுக்கும் அறிஞர் அண்ணா தலைமை விருது வழங்குவதுடன் பள்ளிக்கு ரூ 10 லட்சம் வழங்கப்படும்.
- ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
- நடமாடும் ஆய்வகங்கள் எனும் திட்டம் ரூ.25 கோடி செலவில் நடத்தப்படும்.
- ஒவ்வொரு மாணவரின் கலைச் செயல்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.5 கோடி மதிப்பில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும்.
- ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.25 லட்சம் செலவில் பள்ளிகளில் காய்கற்த் தோட்டம் அமைக்கப்படும்.
- நடுநிலைப் பள்ளிகளில் (2713) உயர்தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.210 கோடி செயலவில் அமைக்கப்படும்.
- ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.30 கோடி மதிப்பில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- சுமார் 7,500 எனும் எண்ணிக்கையில் திறன் வகுப்பறைகள் ரூ. 150 கோடி செலவில் அமைக்கப்படும்.
- மாநில அளவில் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.
- உயர்கல்வி மாணவர்களுக்குத் தேன்சிட்டு இதழ், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ் ஆகியன மாதம் இருமுறை வெளியிடப்படும்.
- ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் எனும் இதழ் வழங்கப்படும்.
ஆகிய பள்ளிக் கல்வித்துறை சார்ந்த பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
மாற்றுத் திறனாளிகள் விருப்பத்தின் படி உபகரணம் தேர்வு செய்யும் திட்டம்!
ரூ.7,000 கல்வி உதவித்தொகை -விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Share your comments