ஜூன் மாதம் 2023-24 ஆம் நிதியாண்டின் மூன்றாவது மாதமாகும். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
பொது மக்களின் வாழ்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்தல் போன்ற பல செயல்பாடுகளுக்காக ஏராளமானோர் தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. விடுமுறைக்கிணங்க பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஜூன் 2023 இல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட திருவிழாக்கள், ஆண்டு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகள் என மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். (மாநிலங்களின் முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் ஏற்ப)
ஜூன் 2023 வங்கி விடுமுறைகளின் பட்டியல்:
ஜூன் 4, 2023: ஞாயிறு (அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
ஜூன் 10, 2023: இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
ஜூன் 11, 2023: ஞாயிறு (அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
ஜூன் 15, 2023: மிசோரம் மற்றும் ஒடிசாவில் ராஜ சங்கராந்தி முன்னிட்டு விடுமுறை
ஜூன் 18, 2023: ஞாயிறு (அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
ஜூன் 20, 2023: ஒடிசாவில் ரத யாத்திரை முன்னிட்டு விடுமுறை
ஜூன் 24, 2023: நான்காவது சனிக்கிழமை (அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
ஜூன் 25, 2023: ஞாயிறு (அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
ஜூன் 26, 2023: திரிபுரா மாநிலத்தில் கர்ச்சி பூஜை விடுமுறை
ஜூன் 28, 2023: கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஈகை திருநாளினை முன்னிட்டு விடுமுறை
ஜூன் 29, 2023: மீதமுள்ள மாநிலங்களில் ஈகை திருநாளினை முன்னிட்டு விடுமுறை
ஜூன் 30, 2023: மிசோரம் மற்றும் ஒடிசாவில் ரிமா ஈத் உல் அஷா முன்னிட்டு விடுமுறை
மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகள் விடுமுறையினை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டு வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், தங்களது பணப் பரிவர்த்தனைகளை மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம். நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம். கூடுதலாக, நீங்கள் பணத்தை மாற்ற UPI ஐப் பயன்படுத்தலாம்.
பணம் எடுக்க, நீங்கள் ஏ.டி.எம். போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், வங்கி விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கிச் செயல்பாடுகளைச் சீராகத் தொடரலாம்.
மேலும் காண்க:
Odisha இரயில் விபத்து- தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்கள், அரசு கவலை
Share your comments