தமிழ்நாடு அரசின் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு (Pongal Prize)
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் வழக்கமாக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவது வழக்கம். அதன்படி 2022ம் ஆண்டு வெல்லம், முந்திரி, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழக்கப்பட்டது. 2021ம் ஆண்டில் குடும்ப அட்டைக்கு ரூ. 2500 வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பரிசு தொகுப்பு குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், சில இடங்களில் வெல்லம் உருகிவிட்டதாகவும், கரும்பு காய்ந்து விட்டதாகவும் புகார் எழுந்தது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொங்கல் பானைகள்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!
Share your comments