நாடு முழுவதிலுமுள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு அகில இந்தியா அளவில் நுழைவுத்தேர்வு நடை பெற உள்ளது.விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது மத்திய மனிதவள துறையின் கீழ் வரும் (NTA) மற்றும் இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சரால் ரிசர்ச் (ICAR) இணைத்து நடத்த உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஊக்கத்தொகையுடன் கல்வியினை தொடரலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-04-19
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 01-07-19
நுழைவுத்தேர்வு முடிவு வரும் நாள்: 17-07-19
நுழைவுத்தேர்வு கட்டணம்: பொது பிரிவினர் 700/-
பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 350/-
வயது வரம்பு: 16 வயதிற்கு மேல்
கல்வி தகுதி: பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல்,வேதியல், உயிரியல், தாவரவியல் போன்ற பிரிவின் கீழ் படித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் 50 மேல் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கும்.
தேர்வுக்கான கால நேரம்: 02:30
மொத்த மதிப்பெண்கள் : 150.
சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள்.
தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.nta.com என்ற இணையத்தளத்தை அணுகலாம்.
Share your comments