1. செய்திகள்

பெட்ரோல் ரூ.200ஐ எட்டினால் பைக்கில் 3 பேர் பயணிக்கலாம்! பச்சைகொடி காட்டும் மாநில தலைவர்!

T. Vigneshwaran
T. Vigneshwaran

New Updates On Petrol Price In India

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மக்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய், காய்கறி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக மக்களை அதிகளவில் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு நாள் இடைவேளையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர், 99.26 ரூபாயும் பெட்ரோல் ஒரு லிட்டர் 103.31 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ எட்டினால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசால் அனுமதி வழங்கப்படும்’ என்று அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையில் உள்ளது. இது தொடர்பாக அவர், ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 ஆக உயரும் போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம். இருப்பினும், மாநில அரசிடம் அனுமதி கோர  வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அசாம் மாநில காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் போபீதா சர்மா ‘சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலையை பாஜக அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது எனவும், அதன் பலனை மக்களுக்கு வழங்க அவர்களுக்கு மனமில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க:

பெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி!

தமிழ் நாடு: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

English Summary: If petrol reaches Rs.200, 3 people can travel by bike! Head of State showing the green flag!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.