1. மற்றவை

தமிழ் நாடு: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Petrol Price in Tamil Nadu

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் காரணமாக சாமானிய மக்கள் அவதிப்படுகிறார்கள். தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), இந்தியன் ஆயில்(Indian Oil) , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை  தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரத்தை பார்க்கலாம்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. சில நாட்கள் முன்னதாக் விலைகள் சதத்தை தாண்டி போனதே.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன், பெட்ரோல் விலை முந்தைய விலையிலிருந்து 12 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.98.96 ஆக விற்பனையில் உள்ளது.  அதே போன்று டீசல் விலை 12 காசுகள் குறைந்து ரூ. 93.26 என்ற விலையில் விற்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து மாற்றம் ஏதும் இன்றி, இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமலுக்கு வந்தது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்து விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது  என்பதோடு மட்டுமல்லாமல், பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

தங்க நகைக்கடன் தள்ளுபடி ஏன்?

பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை!

English Summary: Tamil Nadu: Today's petrol and diesel price situation Published on: 20 September 2021, 11:14 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.